உத்தரப்பிரதேச அரசியலில் மாபெரும் சாதனை படைத்த முதலமைச்சர் யோகி அதித்யநாத்

yogiadityanath cmyogiadityanath BJPWinningUP BJPinUP
By Petchi Avudaiappan Mar 10, 2022 07:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வென்று ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அங்கு இரண்டு வரலாற்று சாதனைகள் நிகழவுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்களுக்கு சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்றைய தினம்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக அரசு பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 

உத்தரப்பிரதேச அரசியலில் மாபெரும் சாதனை படைத்த முதலமைச்சர் யோகி அதித்யநாத் | Yogi Adityanath Elected As The Cm Of Up Again

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் யோகி அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும் மக்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளம் என்பதால் இந்தியா முழுவதுமுள்ள மக்களால் உற்று நோக்கப்பட்டது. இந்திலையில் இந்த சட்டமன்ற தேர்தல் மூலம் பாஜக இரண்டு சாதனைகளை நிகழ்த்தவுள்ளது. 

ஒன்று 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு கட்சி தொடர்ந்து 2வது முறையாக  ஆட்சியை பிடிக்கவுள்ளது. மற்றொன்று இதுவரை உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த முதல்வர்களில் எந்த முதல்வரும் மீண்டும் வென்று முதல்வரானதாக வரலாறு இல்லை. அதனை தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார்.