இனி கொண்டாட்டம்தான்.. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலைத்திருவிழா!

Ministry of Education Tamil nadu Chennai
By Sumathi Nov 23, 2022 04:21 AM GMT
Report

அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

கலைத் திருவிழா

தமிழகத்தில் பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி கொண்டாட்டம்தான்.. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலைத்திருவிழா! | Govt School Students Art Festival Starts Today

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் ,மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அரசு நடுநிலை ,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

பள்ளிக்கல்வித்துறை 

பள்ளி அளவில் இன்று முதல் 28ஆம் தேதி வரையிலும், வட்டார அளவில் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் ஆறாம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், மாநில அளவில் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும் இந்த கலைத் திருவிழா போட்டி நடைபெற உள்ளது.

இதில் மாணவ மாணவிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.