9-ம் வகுப்பிலேயே இவ்வளவு ஸ்மார்ட்-ஆ? தொக்கா தூக்கிய அமேசான் - அசர வைத்த அரசு பள்ளி மாணவர்!
அரசு பள்ளி மாணவர் ஒருவர் தனது திறமையால் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார்.
9ம் வகுப்பு மாணவர்
விருதுநகர் மாவட்டம், இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லபெருமாள் - முத்துலட்சுமி, இந்த தம்பதியின் மகன் சைலேஷ், இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகின்றனர். பெற்றோர் இஸ்திரி தொழில் நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகனுக்கு மொபைல் போன்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. குடும்ப சூழல் அறிந்த மகன் சைலேஷ் தொழில்நுட்பத்தில் தனது அறிவை வளர்த்துக் கொண்டார். இவர் செயலிகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, தொழில்நுட்பங்களை படித்து சொந்தமாக 3 செயலிகளை உருவாக்கியுள்ளார்.
அமேசான் நிறுவனம்
இந்நிலையில், இவர் விளையாட்டு தொடர்பான இரண்டு செயலிகளை விற்பனை செய்துள்ளார். விவரம் அறிந்த அமேசான் நிறுவனம் சைலேஷ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் தனது அறிவாற்றலால் உலகின் பிரபல நிறுவனமான அமேசான் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதனால் சைலேஷ் அமேசான் நிறுவனத்திற்கு செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், முறையான வழிகாட்டுதல் காரணமாக செயலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த மாணவர்கூறினார், இதற்கு தனது கணினி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.