புதிதாக வரும் நெரிசல் வரி - வாகன உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு
வாகன ஓட்டிகளுக்கு புதிதாக நெரிசல் வரி விதிக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உள்ளது. அரசாங்கமும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் அதிகரிக்கும் மக்கள் தொகையால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இந்நிலையில் அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
நெரிசல் வரி
இதன்படி நெரிசல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரியானது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள முக்கிய சாலைகளில் 'பீக் ஹவர்' எனப்படும் பிஸியான நேரங்களில், அந்த சாலைகளின் வழியாக பயணம் செய்யும் வாகனங்களுக்கு விதிக்கப்பட உள்ளது.
இதனால் தேவையற்ற பயணங்களை இந்த சாலைகளில் தவிர்ப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. மேலும் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த துவங்குவர்.
தற்போது டெல்லியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக டெல்லியில் 13 முக்கிய சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் விரைவில் நெரிசல் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.