அரசின் மெத்தன போக்கு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! இபிஸ் குற்றச்சாட்டு!!
தமிழக அரசின் மெத்தன போக்கால் தான் சென்னை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மழை வெள்ள பாதிப்பு
மழை நின்று 4 நாட்கள் கடந்த போதிலும், பெருமழையின் காரணமாக இன்னும் சில இடங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கை மீட்கப்படவில்லை. மக்கள் பலரும் தங்களுக்கு முறையான தேவைகளை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வரும் நிலையில், அதிமுகவும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து ஆளும் அரசை விமர்சித்து வருகின்றது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை என்றும் திமுக அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை என விமர்சித்தார்.
இபிஸ் குற்றச்சாட்டு
ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது என ஆளும் அரசின் கூற்றை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து அதிமுக ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம் என்றும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம் என்றும் அதிமுகஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம் என்றும்எடுத்துரைத்தார்.
முன்னதாக சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண உதவிகளை பகுதியில் அவர் வழங்கினார்.