விஜயகாந்துக்கு திடீர் சுவாச பிரச்சனை - ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை!
Vijayakanth
Chennai
DMDK
By Sumathi
2 years ago
விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவரும் முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை
இதற்கிடையில், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக, உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.