உங்கப்பன் வீட்டு பஸ்ஸா? பெண்ணை தரக்குறைவாக திட்டிய அரசு பஸ் டிரைவர்!
ஓட்டுநர், பெண் பயணியை கடுமையாக பேசியுள்ளார்.
பெண் பயணி அவதி
நீலகிரி, கூடலூரில் இருந்து அய்யங்கொள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரு பேருந்து, அய்யன்கொள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
அங்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அந்தப்பேருந்து, அடுத்த நிறுத்தமான அய்யன்கொள்ளியில் நின்றுள்ளது.
ஓட்டுநர் சஸ்பெண்ட்
இதற்கிடையே அங்கிருந்த ஜீப்பைப்பிடித்து பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண், பேருந்தை நிறுத்தாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அவர், “நீங்க கையை எல்லாம் காட்டவில்லை. இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” என கடுமையாக பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.