தயிர் தான் முக்கியம்... பொதுமக்கள் இல்லை... ரயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர்

pakistan driverstopstrain
By Petchi Avudaiappan Dec 11, 2021 06:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பாகிஸ்தானில் ரயிலை பாதியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தயிர் பாக்கெட் வாங்கி வந்த சம்பவம் வைரலாகி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி இண்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஓட்டுனர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஓர் இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி விட்டு தயிர் வாங்க சென்றுள்ளார்.

பின் அலட்சியமாக நடந்து வந்த அவர்க மீண்டும் ரயிலை இயக்கி உள்ளார்.இந்த நிகழ்வை ரயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவருடன், ரயிலின் உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.இது குறித்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் சொத்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை.

இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.