12ம் வகுப்பு வேதியல் வினாத்தாள்; தவறான கேள்விக்கு முழு மதிப்பெண்- மாணவர்கள் happy!

Government of Tamil Nadu
By Swetha Apr 03, 2024 10:23 AM GMT
Report

12ம் வகுப்புபொதுத்தேர்வு வேதியியல் வினாத் தாளில் தவறான கேள்விக்கு முழு மதிப்பெண்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேதியல் வினாத்தாள்

தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது. அதேபோல 11ம் வகுப்பு பொது தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

12ம் வகுப்பு வேதியல் வினாத்தாள்; தவறான கேள்விக்கு முழு மதிப்பெண்- மாணவர்கள் happy! | Govt Announces 3 Marks For Wrong Question

12ம் வகுப்பு முடிவடைந்த நிலையில், விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. மொத்தம் 83 மையங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு வாழ்த்துகள் - ஒபிஎஸ், சீமான்!

தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு வாழ்த்துகள் - ஒபிஎஸ், சீமான்!

முழு மதிப்பெண்

அவர்களுக்கு, விடைக் குறிப்புகள் வழங்கப்பட்டத்தோடு,பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்முறை வேதியியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் பகுதியில் இருந்த 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

12ம் வகுப்பு வேதியல் வினாத்தாள்; தவறான கேள்விக்கு முழு மதிப்பெண்- மாணவர்கள் happy! | Govt Announces 3 Marks For Wrong Question

அதன்பேரில், அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் 3 மதிப்பெண் வழங்க தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.