கவர்னர் தேநீர் விருந்து - திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

Tamil nadu DMK R. N. Ravi
By Swetha Aug 13, 2024 08:00 AM GMT
Report

கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தேநீர் விருந்து

இந்திய நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் விருந்தை அளிக்க உள்ளார்.

கவர்னர் தேநீர் விருந்து - திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு! | Governors Tea Party Dmk And Alliances Neglects

இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

முடிவடைந்த பதவிக்காலம் - மாற்றப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி? டெல்லி பயணத்தின் பின்னணி

முடிவடைந்த பதவிக்காலம் - மாற்றப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி? டெல்லி பயணத்தின் பின்னணி

புறக்கணிப்பு

இந்த நிலையில், சுதந்திரதின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

கவர்னர் தேநீர் விருந்து - திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு! | Governors Tea Party Dmk And Alliances Neglects

அதன்படி , கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.