பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு - அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பொன்முடியை அமைச்சராக்க முடியாது என்ற ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மறுப்பு
முன்னாள் அமைச்சரான பொன்முடிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் அவரது பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்தது.
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க திமுக அரசு முடிவு செய்ததையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
அரசு மனு தாக்கல்
இதற்கிடையில், தமிழக அரசுக்கு ஆளுநர் எழுதிய பதில் கடித்ததில் ‘உச்ச நீதிமன்றம் பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தித் தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை.
எனவே அவரை மீண்டும் அமைச்சராக்க முடியாது’ என குறிப்பிட்டிருந்தது. இந்த பதிலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசு ஆளுநருக்கு எதிராக எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
மேலும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.