பதவிக் காலம் நீட்டிப்பு ? 3-வது முறையாக ஆளுநர் டெல்லி பயணம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த மாதத்தில் 3-வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதுமட்டுமில்லாது திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சால் தமிழ்நாடு அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த மாதத்தில் 3-வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி பயணம்
கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ குடியரசு தலைவரிடம் இருந்து அறிவிப்பு வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார்.
இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி ஆளுநர் டெல்லி சென்று 4 நாட்கள் தங்கியிருந்தார்.அதைத்தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி 2-வது முறையாக டெல்லி சென்ற ஆளுநர், 3 நாட்களுக்குப் பிறகு, 21-ம் தேதி சென்னை வந்தார்.
இந்நிலையில், 3-வது முறையாக நேற்று காலை 6.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். இன்று இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் சென்னை திரும்பவுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.