ராஜராஜ சோழன் ஆட்சியில்தான் ஆழ்ந்த ஆன்மீகம் - ஆளுநர் புகழாரம்!

Tamil nadu R. N. Ravi
By Sumathi Nov 03, 2022 06:01 AM GMT
Report

ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

ஆளுநர் புகழாரம்

ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள்,

ராஜராஜ சோழன் ஆட்சியில்தான் ஆழ்ந்த ஆன்மீகம் - ஆளுநர் புகழாரம்! | Governor Rn Ravi Praised Raja Raja Cholan

தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார். மேலும், அவரது ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுகூர்ந்தார்.

மேலும், ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.