தேசிய கீதம் எப்போது இசைக்க வேண்டும்? அரசியல் சாசன விதி, நீதிமன்றம் சொல்வதென்ன!
அரசியல் சாசன விதியின் படி தேசிய கீதம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
தேசிய கீதம்
2025ன் முதல் கூட்டத்தொடரில் தனது உரையை தொடங்கும்போது தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் வெளியேறினார்.
அரசியல் சாசன பிரிவு 51(A)(a) கீழ், சிவில் மற்றும் ராணுவ நிகழ்வுகள், குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு தேசிய வணக்கம் செலுத்தும் நிகழ்வு, அணிவகுப்புகளில் 52 வினாடி கொண்ட முழு தேசிய கீதம் இசைக்க வேண்டும் அரசு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர் வரும் போதும், அவர் வெளியேறும் போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும்.
அரசியல் சாசன விதி
அகில இந்திய வானொலியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்த எந்த விதிகளிலும் குறிப்பிடவில்லை.
மேலும், ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் ஒவ்வொரு மரபைப் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த 70 ஆண்டுகளாக சட்டப்பேரவை தொடங்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. தேசியகீதம் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ன் படி, தேசியகீதம் பாடும்போது இடையூறு ஏற்படுத்தினால்,
அவமதித்தால், தேசியக்கொடியை அவமதித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தேசியகீதம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.