மீண்டும் அமைச்சரானார் பொன்முடி - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி!
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சரானார் பொன்முடி
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடி பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநரின் இந்த செயளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பதவிப்பிரமாணம்
இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும் என்று காட்டத்துடன் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வசம் இருந்த உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட துறைகள் பொன்முடிக்கு வழங்கப்பட்டு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து அமைச்சராக பொறுப்பேற்கவிருந்த க.பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். பிறகு, அவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.