மீண்டும் 2G வழக்கு; ஆ.ராசா, கனிமொழி விடுதலை எதிர்த்து மனு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!
2ஜி வழக்கில், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலையை எதிர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
2G வழக்கு
கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது, முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார்.
அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கிய இந்த லைசன்ஸ்களில் குளறுபடிகள் நிலவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சுமார் 1,26,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக, ஆ.ராசா, கனிமொழி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் ட்விஸ்ட்
10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு, 2017ம் ஆண்டு இந்த வழக்கில் சம்மந்த பட்ட அனைவரையும் விடுதலை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதையும் சிபிஐ தரப்பில் ஒப்படைக்கவில்லை எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
இந்நிலையில், 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.