கள்ளச்சாராயத்தை ஒழிக்க கைகோர்த்த ஆளுநர் - முதல்வர்! தமிழகத்தில் வரும் சட்ட திருத்தும்!
மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.
கள்ளச்சாராய மரணங்கள்
தமிழகத்தை உலுக்கியுள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம். விவகாரம் நடந்த 2 நாட்களிலேயே உயிரிழப்பு 60'ஐ மிஞ்சிய நிலையில், இன்னும் அதிகரித்துள்ளதாக தகவல் உள்ளது.
பெரும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த நிலையில், தமிழக அரசும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டியது. கடுமையான கைதுகள் நடந்த நிலையில், அரசு பாதிக்கப்பட்டவர்களின் பக்கமும் ஆறுதலாக நின்றது.
ஆளுநர் ஒப்புதல்
இந்த விவகாரம் சட்டமன்றத்தில் வந்த போது, எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தது. அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ஒரு நாள் பட்டினி போராட்டமும் செய்தார்கள்.
கள்ளச்சாராயத்தை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு சட்ட திருத்த மசோதா ஒன்றையும் கொண்டுவந்து நிறைவேற்றியது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அம்மசோதாவிற்கு அவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.