வடகிழக்கு மாநில மக்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னை தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Tamil nadu Governor of Tamil Nadu Chennai
By Jiyath Dec 12, 2023 05:50 AM GMT
Report

தமிழ்நாடு மற்றும் சென்னை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நாகாலாந்து தினம் மற்றும் அஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு மாநில மக்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னை தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! | Governor About Tamilnadu Nagaland Assam Program

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது "தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது.

ரூ.6000 வெள்ள நிவாரண தொகைக்கு புதிய சிக்கல்..? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!

ரூ.6000 வெள்ள நிவாரண தொகைக்கு புதிய சிக்கல்..? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!

வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்றார்.