பதஞ்சலி நிறுவனம்; தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசின் அதிரடி உத்தரவு!

Supreme Court of India Uttarakhand
By Swetha Apr 30, 2024 10:30 AM GMT
Report

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதஞ்சலி

பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

பதஞ்சலி நிறுவனம்; தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசின் அதிரடி உத்தரவு! | Government Has Suspended The Licences Of Patanjali

குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கு மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து, விளம்பரத்தின் வாசகங்களை மாற்ற சொல்லி உத்தரவிட்டிருந்தது.

இதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தததை அடுத்து, நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார்.

பாபா ராம்தேவ்;மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தராதீர்கள்- நீதிமன்றம் கட்டம்!

பாபா ராம்தேவ்;மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தராதீர்கள்- நீதிமன்றம் கட்டம்!

உரிமம் ரத்து 

மேலும், ”எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறமாட்டேன்” என்று கூறினார். மேலும், தேசிய செய்தி நாளிதழ்களில் சிறிய அளவில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்பும் கோரினார். அதில், ’நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம்.

பதஞ்சலி நிறுவனம்; தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசின் அதிரடி உத்தரவு! | Government Has Suspended The Licences Of Patanjali

மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என இருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், உஙக்ள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரத்தைப் போல மன்னிப்பு விளம்பரமும் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது.

பொய்யான விளம்பரங்களின் மீது மத்திய அரசும், உத்தராகண்ட் அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும்,

பதஞ்சலி நிறுவனம்; தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசின் அதிரடி உத்தரவு! | Government Has Suspended The Licences Of Patanjali

மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.