பிறந்த குழந்தைகள் விற்பனை; அரசு மருத்துவர் உடந்தை - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் விற்பனை
நாமக்கல், சூரியம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ் (29) என்பவரின் மனைவி நாகஜோதி (25) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அக்.12ல் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவம் பார்த்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவர் கைது
அங்கு, தன்னை செவிலியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண், குழந்தையை விற்றால், 2 லட்சம் ரூபாய் தருவதாக, தம்பதியிடம் கூறியுள்ளார். ஆனால், அதனை விரும்பாத தம்பதியினர், மாவட்ட ஆட்சியர் உமா, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர் அனுராதாவின் உதவியுடன் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இதுவரை ஏழு குழந்தைகளை விற்றதாக லோகம்பாள் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவரும் தானும் சிறுநீரக தானத்துக்கும் ஏற்பாடு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையில், அரசு மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
