காப்பக குழந்தைகள் விற்பனை - 7 பேர் கைது! நிர்வாகி தலைமறைவு!

arrest madurai babies sell orphanage
By Anupriyamkumaresan Jul 02, 2021 05:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மதுரையில் கொரோனா தொற்றால் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறி, குழந்தைகளை விற்பனை செய்து வந்த காப்பகத்தின் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான காப்பக நிர்வாகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காப்பக குழந்தைகள் விற்பனை - 7 பேர் கைது! நிர்வாகி தலைமறைவு! | Madurai Orphange Babies Selled 7 Arrest

கடந்த பத்து ஆண்டுகளாக மதுரை ஆத்திக்குளம் பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது, இந்த காப்பகம் இயக்குநர் சிவக்குமார் என்பவரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சாலையில் வசிக்கும் ஆதரவற்றோர்கள், நலிவடைந்தவர்கள், பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை மீட்டு தங்கள் காப்பகத்தில் தங்க வைத்து உணவு, இருப்பிடம் கொடுக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது. தங்களது சமூகப் பணியைப் புகைப்படம் எடுத்து, பத்திரிக்கைகளில் வெளியிட்டு, காப்பகத்திற்கு நன்கொடை பெறும் பணியை மிகவும் ஹை-டெக்காக மேற்கொண்டு வந்தனர்.

காப்பக குழந்தைகள் விற்பனை - 7 பேர் கைது! நிர்வாகி தலைமறைவு! | Madurai Orphange Babies Selled 7 Arrest

கடந்த 29-ம் தேதி மனநலம் குன்றிய பெண்ணின் 1 வயது ஆண் குழந்தை கொரோனா தொற்றால் இறந்துவிட்டதால், மயானத்தில் குழந்தையின் உடலை புதைத்துவிட்டதாகவும் கூறி குழந்தையை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு, 2 வயது குழந்தையையும் காப்பகத்தில் விற்பனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் குழந்தைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குழந்தைகள் விற்பதற்கு துணையாக இருந்த புரோக்கர்கள் பீபி குளம் ராஜா, திருப்பாலை செல்வி, காப்பக கோ-ஆர்டினேட்டர் கலைவாணி ஆகியோரோடு குழந்தைகளை விலைக்கு வாங்கிய தம்பதியர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

காப்பக குழந்தைகள் விற்பனை - 7 பேர் கைது! நிர்வாகி தலைமறைவு! | Madurai Orphange Babies Selled 7 Arrest

மேலும் தலைமறைவாகி உள்ள காப்பக இயக்குநர் சிவக்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மாதர்ஷாவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரையில் இருந்து செய்தியாளர் ஹமீது கலந்தர்.