Sunday, Jun 15, 2025

நடிகர் கவுண்டமணி மூஞ்சில முழிக்க மாட்டேன் - சபதம் எடுத்த கங்கை அமரன்..!

Tamil Cinema Goundamani
By Thahir 2 years ago
Report

தமிழ்சினிமாவில் பன்முகத்தன்மையை கொண்டவர் கங்கை அமரன் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்த கங்கை அமரன் 

இவர் அண்மையில் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவில் இருந்து சிலகாலம் விலகியும் அண்ணன் மூஞ்சியில் கங்கை அமரன் 14 ஆண்டுகளுக்கும் மேல் முழிக்காமல் இருந்து வருகிறார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பண விசயத்தில் தான் ரொம்ப கஷ்டப்பட்டதை தெரிவித்துள்ளார்.  கங்கை அமரன் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

goundamani-who-insulted-gangai-amaran

கங்கை அமரனை காசுக்காக அவமானப்படுத்தியும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் காளை படத்தில் ராமசாமி கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்து இருந்தார்.

அப்போது கங்கை அமரன் பணப்பிரச்சனையில் இருந்தார். தன்னுடைய சம்பளம்ட அவரின் கஷ்டத்தால் வராமல் போய்விடுமோ என்று நினைத்த கவுண்டமணி தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை கொடுங்கள் என்று கறராக கேட்டு உள்ளார்.

அவமானப்படுத்திய கவுண்டமணி 

கவுண்டமணி சம்பள விசயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர் என்பதால் பணம் வருமோ வராதோ என்ற சந்தேகத்தில் நடித்து முடித்த பின் பணம் கேட்டுள்ளார்.

goundamani-who-insulted-gangai-amaran

அப்படி சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நான் டப்பிங் வரமாட்டேன் என்று மேனேஜர் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தை வெளியிட்டு சம்பளத்தை கங்கை அமரன் கொடுத்து இருக்கிறார். பல வாய்ப்புகளை கொடுத்த கங்கை அமரனை காசுக்காக இப்படி அவமானப்படுத்தியதை நினைத்து கங்கை அமரன் பெரிதும் வருத்தப்பட்டு உள்ளார்.