Thursday, May 22, 2025

ரி-என்ட்ரீ கொடுக்கும் கவுண்டமணி... ரசிகர்கள் எதிர்பார்ப்பு! எந்த படம் தெரியுமா?

Sivakarthikeyan Only Kollywood Goundamani Gossip Today
By Sumathi 3 years ago
Report

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

கவுண்டமணி 

கடைசியாக 2016-ம் ஆண்டு ‘வாய்மை’ என்கிற படத்தில் நடித்திருந்தார். அவரின் வசனங்களும் திட்டல்களும் ஒவ்வொரு டீக்கடையிலும், வீட்டு திண்ணைகளிலும் இன்றளவும் ஒளித்துக் கொண்டிருக்கிறது.

goundamani

மீண்டும் அவரை திரையில் காண தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 தீவிர ரசிகர் சிவா

இதில் அவர் சிவாவின் பெரியப்பாவாக நடிப்பார் என்றும், படம் முழுவதும் அவருடன் தோன்றுவார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.சிவகார்த்திகேயன், கவுண்டமணியின் தீவிர ரசிகர். டி.வி.யில் பணிபுரியும் போது, அவரைப் போன்றே மிமிக்ரி செய்து அசத்துவார்.

sivakarthikeyan

‘மாவீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் மூலம் கியாரா அத்வானி தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிஷ்கின் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

மாவீரன்

அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார், வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாவீருடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்போது கவுண்டமணியின் வருகையால் இந்த படத்துக்கு எதிர்பாப்பு பெரியதாகிவிட்டது.