20 வருட சட்டப்போராட்டம் - கவுண்டமணிக்கு கிடைத்த 50 கோடி சொத்து

Chennai Goundamani Madras High Court Tamil Actors
By Karthikraja Oct 08, 2024 04:00 PM GMT
Report

நடிகர் கவுண்டமணியின் 50 கோடி மதிப்பிலான சொத்து அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

கவுண்டமணி

80களில் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 

கவுண்டமணி

நடிகர் கவுண்டமணி, கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். 

வாழ்க்கையை கெடுத்த கவுண்டமணி; அதெல்லாம் கூட செஞ்சுருக்காரு - விளாசிய நடிகை!

வாழ்க்கையை கெடுத்த கவுண்டமணி; அதெல்லாம் கூட செஞ்சுருக்காரு - விளாசிய நடிகை!

வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம்

இதன் பின் 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் போடப்பட்டு, 1996 - 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் கவுண்டமணி செலுத்தியுள்ளார். 

goundamani

ஆனால் ஒப்பந்தத்தின் படி 2003 வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும் எனக் கூறி கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாகவும், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்தது.

மீண்டும் கிடைத்த நிலம்

இதனால் 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் கவுண்டமணியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கட்டுமான நிறுவனம் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கவுண்டமணியின் நிலம் இன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.