வாழ்க்கையை கெடுத்த கவுண்டமணி; அதெல்லாம் கூட செஞ்சுருக்காரு - விளாசிய நடிகை!

Jiyath
in பிரபலங்கள்Report this article
தனது வாழ்க்கையை கெடுத்தது நடிகர் கவுண்டமணி தான் என்று நடிகை ஷர்மிலி தெரிவித்துள்ளார்.
நடிகை ஷர்மிலி
ஆவாரம்பூ என்ற படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷர்மிலி. தொடர்ந்து கவுண்டமணி, விவேக், வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
குறிப்பாக கவுண்டமணியுடன் மட்டும் 27 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். இந்த ஜோடி அப்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷர்மிலி தனது வாழ்க்கையை கெடுத்தது நடிகர் கவுண்டமணி தான் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது " நான் காமெடிக்கே போயிருக்க கூடாது.
ஒரு தடவ என்னை பார்த்த கவுண்ட மணி "அந்த பொண்ணு அழகா இருக்கே.. என் கூட ஜோடியா போடுங்க" அப்படினு ஒரு கம்பெனிகிட்ட கேட்ருக்காரு. அவங்க வந்து என்கிட்ட கேட்டப்போ, நான் முடியாதுனு சொல்லிட்டேன். பின்னர் என்னை சரத்குமார் படம்னு சொல்லி கூப்பிட்டாங்க. சரி கிளாமர் ரோல்னு நினைச்சு அங்க போனா, கவுண்டமணிக்கு ஜோடினு சொல்லிட்டாங்க.
ஆப்பு வச்சுருக்காரு
அந்த படம் நடிச்சிட்டு இருக்கும்போதே கவுண்டமணி கூட வந்தவங்க, அவர் கூட ஜோடியா நடிக்க 4 படத்துக்கு அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாங்க. அவர் கூட நடிச்சதுனால நான் நிறைய பெரிய பெரிய படங்களை மிஸ் பண்ணிட்டேன்.
நான் நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடிச்சிருப்பேன். கவுண்டமணி என்ன பண்ணுவாருனா.. எனக்கு வர நல்ல படங்களை எல்லாம் தடுத்துருவாரு. அந்த பொண்ணு வேண்டாம் வேற யாரையாவது போடுங்க அப்படினு சொல்லுவாரு. எனக்கு டேட் இல்ல ஹைதராபாத் போயிட்டேன்னு சொல்லுவாரு. இப்படி நிறைய படத்துக்கு ஆப்பு வச்சுருக்காரு. அவருக்கு என்ன பிரச்சனனு எனக்கு தெரியாது. ஏதாவது நடிச்சு ஒரு பக்கம் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா நான் ஆகிட்டா, அவர் கூட ஜோடியா நடிக்க மாட்டேனோன்னு பயம் போல.
அப்பறம் ஒரு கட்டத்துல அவர் கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்படி சொன்னதும் என்னை எல்லா படத்துலயும் தூக்கிட்டாரு. அவர் நடிக்கும் ஏதாவது படத்தில் நான் வேலைக்காரி கதாபாத்திரத்துக்கு போனா கூட "உங்களுக்கு என் டேட் வேணுமா வேணாமா.. அந்த பொண்ணு வரக்கூடாதுன்னு சொல்லுவார. இந்த மாதிரி என் வாழ்க்கையை கெடுத்ததே கவுண்டமணி தான்" என்று தெரிவித்துள்ளார்.