அதிபர் கோத்தபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் பயணம் ? வெளியான பரபரப்பு செய்தி
இலங்கையில்கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.இதனால் அரசின் மீது பொதுமக்களின் கோபம் திரும்பிய நிலையில் , கடந்த மே மாதம் முதல் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அதிபர் மாளிகையினை கைபற்றியுள்ளனர்.
கைபற்றப்பட்ட அதிபர் மாளிகை
அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் கோட்டபய ராஜபக்ச மாளிகையில் இருந்து வெளியேறி மாலத்தீவு தப்பி சென்றார்.
ஆனால் சென்ற இடத்திலும் வெறுப்பினையே சம்பாதித்த கோட்டபயவுக்கு எதிராக மாலத்தீவிலும் எதிர்ப்பு குரல் எழுந்தது.
மாலத்தீவிலும் எதிர்ப்பு
கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். மாலதீவில் கோத்தபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பயணம்
இந்நிலையில், மாலத்தீவுக்கு குடும்பத்துடன் இன்று அதிகாலை தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.