சிங்கப்பூர் பறந்த கோட்டபய ராஜபக்ச? நாடெங்கும் கிளம்பும் எதிர்ப்பு!
மாலத்தீவிலும் கோட்டபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டபய ராஜபக்ச
இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க ஆதரவளிக்குமாறு இலங்கை மக்களை ராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அரசியல் தீர்வு காணும்படி, சபாநாயகரிடமும் இலங்கை ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.

ரணிலை தற்காலிக அதிபராக கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது. அதிபர் வெளிநாடு சென்றுள்ளதால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பயணம்
இதற்கு முன், கோட்டபய ராஜபக்ச துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan