கூகிள் விடுத்த முக்கிய எச்சரிக்கை - இதை செய்யலைனா ஜிமெயில் கணக்கு டெலிட் ஆகும்
ஜிமெயில் பயனர்களுக்கு கூகிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.
கூகிள் எச்சரிக்கை
நவீன டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் முதல் முதியவர் என அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஈ-மெயில் முகவரி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் கணக்கு தொடங்கி உள்ளனர்.
ஜிமெயில்
கூகிள் தங்களுடைய சர்வரில் இட வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில்(gmail) கணக்குகளை நிரந்தரமாக சர்வரில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.
அவ்வாறு நீக்கி விட்டால் அதில் உள்ள ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது. இந்த பணியை செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.
தப்பிக்க வழிமுறை
இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கூகிள் சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் படி, வெகு நாட்களாக பயன்படுத்தாத ஜிமெயில் கணக்கை லாகின் செய்து ஒரு மின்னஞ்சலை(mail) படிப்பது அல்லது மின்னஞ்சல் அனுப்புவது என ஏதாவது ஒன்று செய்யும் போது உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் உள்ளதாக கருதப்படும்.
இதை செய்ய தவறினால் உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் இல்லை என கருதி உங்கள் ஜிமெயில் கணக்கு நிரந்தமாக நீக்கப்படும். அதில் உள்ள தகவல்களை திரும்ப பெற முடியாது.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
