இனி ட்ரையல் ரூம் வேண்டாம் - Google AI மூலம் உடைகளை அணிந்து பார்க்கலாம்
ஆன்லைன் மூலம் உடைகளை அணிந்து பார்க்கும் தொழில்நுட்பத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்
பொதுவாக உடை வாங்க செல்லும் போது அந்த உடை நமக்கு பொருந்துகிறதா என கடையில் உள்ள ட்ரையல் ரூமூக்கு சென்று உடையை அணிந்து பார்த்து விட்டு தான் வாங்குவதா வேண்டாமா முடிவெடுப்போம்.
குண்டூசி முதல் தங்கம் வரை ஆன்லைனில் வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருந்தால் கூட ஆடை வாகும்போது பலரும் இந்த ஆடை பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகத்தில் நேரடியாக கடைக்கு சென்று அணிந்து பார்த்து வாங்கி வருகின்றனர்.
Google AI
தற்போது இந்த சிக்கலை சரி செய்யும் வகையில் Google AI ஷாப்பிங் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் virtual ஆக உடைகளை அணிந்து பார்க்கலாம்.
இதில் பயனர்கள் தங்கள் வாங்க விரும்பும் ஆடையைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ளTry On ஐ கிளிக் செய்து, அதன் பின் உங்களைப் போன்ற ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஆடை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
டிஃப்யூஷன் தொழில் நுட்பம்
மடிப்புகள், சுருக்கங்கள் உட்பட, அணியும் போது எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ஆடை XXS முதல் XXXL வரையிலான வெவ்வேறு அளவுகளில் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் காணலாம்.
ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தின் டிஃப்யூஷன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கருவி செயல்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆடைகளில் உள்ள சிறு மடிப்பை கூட துல்லியமான உயர்தர படங்களில் பார்க்க இந்த டிஃப்யூஷன் தொழில்நுட்பம் உதவுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு உள்ள பொதுவான பிரச்சனையை சரி செய்யும் வகையில் கூகிள் இந்த முயற்சியை கடந்த ஆண்டே தொடங்கி விட்டது.