Search அப்டேட்; ஏஐ வைத்து காய் நகர்த்த ரெடியாகும் கூகுள் - கவனிச்சீங்களா?
கூகுள் தேடுபொறியில் புதிய அப்டேட்டை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Google Search
கூகுள் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). தொழில்நுட்பத்தை கூகுள் தேடுபொறியில் சேர்த்துள்ளது.
ஏ.ஐ. உருவாக்கிய பதில்களை Search-ல் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,
ஏஐ உதவி
முழுமையாக மேம்படுத்தப்பட்ட 'ஏ.ஐ. ஓவர்வியூஸ்' இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விரைவில் பிற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆராய்ச்சி முதல் திட்டமிடல் வரை, உங்கள் மனதில் உள்ளதையோ, அல்லது நீங்கள் செய்ய வேண்டியதையோ கேட்டால் போதும்.
அவற்றுக்கு தீர்வு வழங்குவதற்கான மற்ற வேலைகள் அனைத்தையும் கூகுள் கவனித்துக் கொள்ளும் என கூகுள் நிறுவன தேடுபொறி பிரிவின் தலைவர் லிஸ் ரீட் கூறியுள்ளார்.