உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி - சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த Google!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது
உலகக்கோப்பை
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. எனவே, இன்று (நவம்பர் 19) நடக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
கூகுள் டூடுல்
இந்த போட்டியானது குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் நடைபெறுகிறது. இம்முறை உலகக்கோப்பையை இந்திய அணி தட்டித்தூக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும், கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, ஆஸ்திரேலியா அணி 8 வருடங்கள் கழித்து இன்று மீண்டும் உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.