கூகுள் மேப்பால் வந்த வினை; ரோடுக்கு பதில் ஓடைக்குள் பாய்ந்த கார் - இதற்கு முடிவே இல்லையா?

Google Kerala Accident
By Swetha May 26, 2024 05:42 AM GMT
Report

கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார் ஆற்றுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கூகுள் மேப் 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 பேர் கொண்ட குழு சுற்றுலா பயணம் மேற்கொள்ள காரில் கேரளா வந்துள்ளனர்.இவர்கள் இரவு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பெய்த கனமழை காரணமாக அவர்கள் பயணித்த சாலை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது.

கூகுள் மேப்பால் வந்த வினை; ரோடுக்கு பதில் ஓடைக்குள் பாய்ந்த கார் - இதற்கு முடிவே இல்லையா? | Google Maps Shows Route To River Car Sinks

சுற்றுலாப் பயணிகளுக்கு வழி தெரியாததால் கூகுள் மேப் பயன்படுத்தி ஒட்டி சென்றுள்ளனர். இந்த சூழலில், குருப்பந்தாரா பகுதி சென்றபோது, தவறுதலாக வழி மாறி கார் அருகில் இருந்த ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியது. உயிர் பயத்தில் காருக்குள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

கூகுள் மேப்பை நம்பி காரை ஆற்றில் விட்ட டிரைவர்.. 2 டாக்டர்கள் பலி - 3 பேர் படுகாயம்!

கூகுள் மேப்பை நம்பி காரை ஆற்றில் விட்ட டிரைவர்.. 2 டாக்டர்கள் பலி - 3 பேர் படுகாயம்!

 ஓடைக்குள்  கார்

இதையடுத்து, அப்பகுதியினர் மற்றும் போலீஸாரின் உதவியோடு 4 பேரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வந்த கார் நீரில் மூழ்கி விட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூகுள் மேப்பால் வந்த வினை; ரோடுக்கு பதில் ஓடைக்குள் பாய்ந்த கார் - இதற்கு முடிவே இல்லையா? | Google Maps Shows Route To River Car Sinks

அதே சமயத்தில் நீரில் மூழ்கிய காரை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இது போன்ற சம்பவம் கேரளாவில் நடப்பது முதல் முறையல்ல, முன்னதாக இரு இளம் மருத்துவர்கள் ஆற்றில் விழுந்து பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மழைக்காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கை வழிகாட்டுதல்களை கேரள காவல் துறை வெளியிட்டுள்ளது.