கூகிள் மேப்பை நம்பி கோவா பயணம் - வேறு மாநிலத்தின் நடுக்காட்டில் தவித்த குடும்பம்
கூகிள் மேப்பை நம்பி பயணம் செய்த குடும்பம் நடுக்காட்டில் தவித்துள்ளது.
கூகிள் மேப்
வழி தெரியாத இடங்களுக்கு செல்பவர்களுக்கு கூகிள் மேப்(Google Map) ஒரு வரப்பிரசாதம். எந்த பாதை வழியாக செல்லலாம் எவ்வளவு நேரம் ஆகும் என அனைத்து தகவல்களையும் வழங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் கூகிள் மேப்பையே பயன்படுகின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு கூகிள் மேப் தவறான வழியை காட்டி அலைக்கழித்தோடு, சிலருக்கு உயிரிழப்பை கூட ஏற்படுத்தியுள்ளது.
கோவா பயணம்
தற்போது பீகாரை சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கோவாவிற்கு காரில் கிளம்பியுள்ளனர். காரை ஓட்டியவர் கூகுள் மேப் காட்டும் வழியை பின்தொடர்ந்து செல்ல அது தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது.
அந்த கார் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி உள்ளே சென்றுள்ளது. அடர்ந்த காட்டில் மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில் அச்சத்தில் விடியும் வரை காரிலே இருந்துள்ளனர்.
விடிந்த பின்னர், மொபைல் நெட்வொர்க்கிற்காக 4 கிமீ நடந்தே பயணம் செய்து அவசர உதவி எண்ணான 112 ஐ தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், உள்ளூர் காவல்துறையினர் அவர்களை காட்டில் இருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.