ஒரு வருடமாக துப்பு கிடைக்காத கொலை வழக்கு - முடிவுக்கு கொண்டு வந்த கூகுள் மேப்
கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வர கூகுள் மேப் உதவியுள்ளது.
கூகிள் மேப்
வழி தெரியாத இடங்களுக்கு செல்லும் போது, எந்த பாதை வழியாக செல்லலாம் எவ்வளவு நேரம் ஆகும் என அனைத்து தகவல்களையும் கூகிள் மேப்பை வழங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் கூகிள் மேப்பை உபயோகிக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு கூகிள் மேப் தவறான வழியை காட்டி அலைக்கழித்தோடு, சிலருக்கு உயிரிழப்பை கூட ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூகிள் மேப் ஒரு வருடமாக துப்பு துலங்காத வழக்கை முடிவுக்கு கொண்டு வர உதவியுள்ளது.
மயமான வழக்கு
ஸ்பெயின் நாட்டின் சோரியா பகுதியில் கியூபா நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேறு ஒரு பெண்ணுடன் நாட்டை விட்டு செல்வதாக தனது உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மயமாகியுள்ளார்.
இது அவரது உறவினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு வருடமாக காணாமல் போன நபர் குறித்த எந்த எந்த தகவலும் உறவினருக்கோ காவல்துறையினருக்கோ கிடைக்கவில்லை.
அப்போது கூகிள் மேப்பில் ஸ்ட்ரீட் வியூவில் காணாமல் போன நபர் வீட்டருகே ஒருவரின் சடலத்தை காரில் ஏற்றும் படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தினை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரின் முன்னாள் காதலி மற்றும் அந்த பெண்ணின் தற்போதைய காதலர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.