35 வயதில் அசால்ட்டா 41 கோடி சேமிப்பில் கூகுள் ஊழியர் - 22 வயசுல என்ன ஒரு பிளான்!

Google California
By Sumathi Sep 05, 2023 10:03 AM GMT
Report

இளைஞர் ஒருவர் 35 வயதிற்குள் சுமார் 41 கோடி ரூபாய் சம்பளம் ஈட்டுவதை இலக்காக கொண்டுள்ளார்.

கூகுள் ஊழியர்

கலிபோர்னியா, ஆரஞ்சு கவுண்டியைச் சேர்ந்தவர் தொழில்நுட்ப வல்லுநரான நகுன்லி. இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

35 வயதில் அசால்ட்டா 41 கோடி சேமிப்பில் கூகுள் ஊழியர் - 22 வயசுல என்ன ஒரு பிளான்! | Google Engineer Plans To 35 With Savings 41 Crore

வாடகைப் பணத்தை மிச்சப்படுத்த இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு குடும்பத்துடன் தங்கி வேலை தேட முடிவெடுத்துள்ளார். தொடர்ந்து, தகவல் மற்றும் தரவு அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடங்கும் அதே நேரத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி வாய்ப்பை பெற்றுள்ளார்.

அடடே பிளான்

202ல் ட்டப்படிப்பை முடித்தப்பின் முதுகலைப் படிப்பிற்கு இடையில், கூகுளில் ஒரு மென்பொருள் பொறியாளராகவும் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு ஆண்டு வருமானம் $194,000 ( ரூ.1.60 கோடி ) நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு ஆண்டும் தனது ஊதியத்தில் 35 சதவிகிதத்தை முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

35 வயதில் அசால்ட்டா 41 கோடி சேமிப்பில் கூகுள் ஊழியர் - 22 வயசுல என்ன ஒரு பிளான்! | Google Engineer Plans To 35 With Savings 41 Crore

கூகுளில் காலை உணவு மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதால் நகுன்லி உணவுக்காக அதிக பணம் செலவழிப்பதில்லை. மேலும், பிராண்டட் ஆடைகளை அதிகம் விரும்பாததால் அதனை பயணத்தில் செலவிடுகிறார். அதையும், நண்பருடன் பகிர்வது போன்ற குறைந்த கட்டண ஆப்ஷன்களை தேர்வு செய்கிறார்.

இந்நிலையில், 22 வயதாக இருக்கும் இவர் 35 வயதிற்குள் $5 மில்லியன், அதாவது சுமார் 41 கோடி ரூபாய் சம்பளம் ஈட்டுவதை இலக்காக கொண்டு அதன்பின் விரைவாக ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி அனைவரது கவனம் ஈர்த்துள்ளது.