மீண்டும் ஒரு கூகுள் நிறுவன ஊழியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம்
செல்சியாவில் உள்ள கூகுள் தலைமை நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நபர். தற்பொழுது, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், 14-வது மாடியில் திறந்தவெளி மொட்டை மாடியின் விளிம்பில் அவரது கைரேகைகள் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதனை வைத்து அவர் 14- மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு, கூகுள் மென் பொறியாளரான ஜேக்கப் பிராட்(33) மன்ஹாட்டன் தலைமையத்தில் பணிபுரிந்து வந்தார். அவர், பிப்.16-ம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் தற்கொலை
இந்நிலையில், மற்றொரு மென்பொருள் பொறியாளர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து நியூயார்க் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan