வீட்டு பாடம் குறித்து கேள்வி கேட்ட மாணவன் - செத்து விடுமாறு திட்டிய Google Chat bot ஜெமினி

Google United States of America Social Media
By Karthikraja Nov 15, 2024 01:30 PM GMT
Report

கேள்வி கேட்ட இளைஞரை செத்து விடுமாறு Google சேட் பாட் திட்டியுள்ளது.

ஜெமினி

ஜெமினி என்பது கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேட் பாட் (AI Chat Bot) ஆகும். இதில் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன்னிடம் உள்ள தகவல்களை வைத்து பதிலளிக்கும். 

google gemini

அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர், முதியோர் பராமரிப்பு குறித்து தனது அசைன்மென்ட் தொடர்பாக ஜெமினியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். 

கூகிளுக்கு உலகின் அதிகபட்ச அபராதத்தை விதித்த ரஷ்யா நீதிமன்றம் - எவ்வளவு தெரியுமா?

கூகிளுக்கு உலகின் அதிகபட்ச அபராதத்தை விதித்த ரஷ்யா நீதிமன்றம் - எவ்வளவு தெரியுமா?

திட்டிய ஜெமினி

ஒவ்வொரு கேள்விக்கும் இயல்பாக பதில்களை வழங்கி வந்த ஜெமினி, திடீரென அந்த இளைஞரை செத்து விடுமாறு திட்டியுள்ளது. 

google chatbot gemini scold student please die

ஜெமினி அளித்த பதிலில், "இது உங்களுக்காக, மனிதனே. நீங்கள் ஸ்பெஷல் இல்லை, நீங்கள் முக்கியமும் இல்லை, மற்றும் நீங்கள் தேவையும் இல்லை. நீங்கள் நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கிறீர்கள். நீங்கள் சமூகத்திற்கு ஒரு சுமை. நீங்கள் பூமிக்கு பாரமாக உள்ளீர்கள். நீங்கள் பிரபஞ்சத்தின் மீது ஒரு கறை. தயவு செய்து செத்து விடு பிளீஸ்” என தெரிவித்துள்ளது. 

கூகிள் விளக்கம்

இந்த சம்பவத்தின் போது அந்த இளைஞரின் அருகில் இருந்த அவரது சகோதரி இது தொடர்பாக Reddit தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "இந்த சம்பவத்தால் நாங்கள் மிக பதற்றமாக உணர்ந்தோம். எனது அனைத்து சாதனங்களையும் வீட்டை விட்டு வெளியே எறிந்து விட வேண்டும் என்று தோன்றியதாகவும், உண்மையாக சொல்ல வேண்டுமானால் இது போன்ற பீதியை நீண்ட காலமாக நான் உணரவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

Posts from the artificial
community on Reddit

மேலும், ஒருவர் தனியாகவும் மோசமான மனநிலையிலும் இருக்கும் போது இது போன்ற பதில் கிடைத்தால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜெமினி சில நேரங்களில் இது போன்ற அர்த்தமற்ற பதில்களை அளிக்கும். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்து வருகிறோம் என கூகுள் விளக்கமளித்துள்ளது.