தினமும் ஊழியர்களுக்கு இலவச விருந்து கொடுக்கும் கூகுள் - காரணம் சொன்ன சுந்தர் பிச்சை!

Google New York Sundar Pichai
By Sumathi Oct 23, 2024 09:45 AM GMT
Report

கூகுள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு கூப்பன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலவச உணவு 

உலகளவில் கூகுள் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனம். கூகுள் தனது ஊழியர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. அதில் குறிப்பாக கூகுள் தனது ஊழியர்களுக்கு இலவச உணவு கூப்பன்களை வழங்குகிறது.

google free food

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் "The David Rubenstein Show: Peer to Peer Conversation" ஒன்றில் பேசிய சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஒரு பெரிய செலவாக இருக்காது. அது நிறுவனத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது.

இலவச உணவு ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, அவர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. கஃபேவில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலம் புதிய யோசனைகள் வருகின்றன. இந்த யோசனைகள் நிறுவனத்திற்கு நன்மையளிக்கும்.

வெடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; சுந்தர் பிச்சையின் அந்த ஒரு ஈமெயில் தான் - அவ்வளவு நிம்மதி!

வெடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; சுந்தர் பிச்சையின் அந்த ஒரு ஈமெயில் தான் - அவ்வளவு நிம்மதி!

சுந்தர் பிச்சை விளக்கம்

இந்த யோசனைகள் இலவச உணவை வழங்குவதற்கான செலவை விட அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் தானும் கஃபேக்களுக்குச் சென்று மக்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதன் மூலம் தனக்கு பல யோசனைகள் வந்தது. இது படைப்பாற்றலை அதிகரிக்கிறது.

sundar pichai

மேலும், கிட்டத்தட்ட 90% விண்ணப்பதாரர்களுக்கு கூகுள் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. கூகுள் ஒரு வலுவான ப்ரோகிராமிங் பின்னணிகளை கொண்டவர்களை தேடுகிறது. கணினி அறிவியலைப் புரிந்துகொள்பவர்கள் சரிசெய்யவும், மேம்படுத்தவும் தெரிந்தவர்கள் ஆரம்ப நிலைக்கு தேடுகிறோம்.

இன்ஜினியரிங்கில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை. ஆற்றல்மிக்க மற்றும் போட்டி சூழ்நிலைகளில் சிறந்து விளங்கும் அணிக்கு முக்கிய நபராக இருப்பவர்களை கூகுள் உயர்வாகக் கருதுகிறது எனத் தெரிவித்துள்ளார்.