தந்தையின் நெடுநாள் கனவு..நிறைவேற்றிய சுந்தர் பிச்சை - உருக்கமான பதிவு!
தந்தையின் நெடுநாள் கனவை தான் நிறைவேற்றியதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. தேடுபொறி தொடங்கிப் பல வசதிகளில் இந்த உலகையே மாற்றி அமைத்த நிறுவனம் கூகுள் என்றே கூறலாம். சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் அவர் பிஎச்டி படிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பியதாகவும், இதை பெரும் குறையாகவே தனது பெற்றோர்கள் இன்றும் கூறுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இந்த நிலையில், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு அவர் படித்த ஐஐடி காரக்பூர் கல்லூரியால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இந்த விழா,அறிவியல் துறையில் சிறந்த சாதனை புரிந்தவருக்கு வழங்கப்படும்
உருக்கமான பதிவு
"டாக்டர் ஆஃப் சயின்ஸ் (Honoris Causa) என்ற கவுரவ பட்டத்தைப் பெற்றார். அதே விழாவில், அவரது மனைவி அஞ்சலி பிச்சை அவர்களுக்கும் வேதியியல் பொறியியலில் சிறப்பான பங்களிப்பைச் செய்தமைக்காக "சிறந்த பழைய மாணவர் விருது" வழங்கப்பட்டது.
இது தெடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், டாக்டர் பட்டம் பெறுவதில் தன்னைவிட, தனது பெற்றோர் அதிகம் விரும்பினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கவுரவ டாக்டர் பட்டமும் டாக்ட்ரேட் பட்டத்திற்கு இணையானது என நினைக்கிறேன் எனக் கூறி தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிவிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் தற்போது தான் இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் தனது கல்லூரியான ஐஐடி காரக்பூருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு விழாவில் ஐஐடி காரக்பூர் இயக்குநர் VK தேவாரி, பிச்சையின் பெற்றோர் மற்றும் மகள் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று கொண்டனர்.