இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது - கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் ஆர்டர்!
டெக் நிறுவனங்களுக்கு டிரம்ப் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
டெக் நிறுவனங்கள்
வாஷிங்டன்னில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துக்கொண்டார். அதில் உரையாற்றிய அவர், நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது.
மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான அமெரிக்கர்களை பாதித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள், சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அவற்றில் இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளன.
டிரம்ப் அறிவுறுத்தல்
அதேநேரத்தில் அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததும் நடந்தது. கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இனி அது நடக்காது.
அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.