இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 கால்களையும் வெட்டிய மருத்துவர் - யூடியூப் பார்த்து விபரீதம்!

United Kingdom Money
By Sumathi Jul 25, 2025 01:30 PM GMT
Report

 இன்சூரன்ஸ் பணத்துக்காக மருத்துவர் ஒருவர் இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்சூரன்ஸ் பணம்

பிரிட்டனைச் சேர்ந்தவர் நீல் ஹாப்பர்(49). இவர் மருத்துவராக உள்ளார். காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5.4 கோடி பெறுவதற்காக மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ளார்.

நீல் ஹாப்பர்

தனது இரண்டு கால்களிலும், முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றியுள்ளார். இதற்காக உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களையும் வலைத்தளங்களில் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா - எதில் தெரியுமா?

அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா - எதில் தெரியுமா?

மருத்துவர் செய்த செயல்

இந்நிலையில், நீல் ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 கால்களையும் வெட்டிய மருத்துவர் - யூடியூப் பார்த்து விபரீதம்! | Doctor Removes Legs For Rs 5 Crore Insurance Money

தொடர்ந்து நீல் ஹாப்பர் தனக்கு ரத்த நாளப் பிரச்சினை உள்ளது என்றும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால் அது உடல் முழுவதும் பரவும் என்று தங்களை நம்ப வைக்க முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.