சிறுநீரக கல்லை கரைக்கனுமா? தினமும் 2 லிட்டர் சிறுநீர் குடிங்க - ஏஐ பதிலால் அதிர்ச்சி!

Google Kidney Disease Artificial Intelligence
By Sumathi May 07, 2024 11:23 AM GMT
Report

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க கூகுள் ஏஐ கூறிய அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள்  எஸ்ஜிஇ

கூகுள் தேடலில் எஸ்ஜிஇ (சர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தேடல் எளிமையாகியுள்ளது.

google ai

இதன் மூலம், தேடல் நுட்பமாகவும், விரிவாகவும், ஆழமாகவும் அமைவதாக கூகுள் நம்புகிறது. ஆனால், நேர் எதிரான பதில்களை தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், சிறுநீரகக் கற்களிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று கூகுளில் தேடியுள்ளார்.

801 கிராம் எடை கொண்ட மிகப்பெரிய சிறுநீரக கல் - இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை!

801 கிராம் எடை கொண்ட மிகப்பெரிய சிறுநீரக கல் - இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை!

சிறுநீரகக் கல்

அதற்கு கூகுள், ‘சிறுநீரகக் கற்களை தினந்தோறும் குறைந்தது 2 லிட்டர் சிறுநீரை அருந்துங்கள்’ என பதிலளித்துள்ளது. இதனை அவர் பதிவாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், நேரடியாக மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுவதே நல்லது என்று பலர் அறிவுரை கூறி கமெண்டுகளை குவித்து வருகின்றனர். சமீப காலமாக கூகுளின் மேப் வழிகாட்டல் தொடர்ந்து தவறாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.