சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது? கற்களை கரைக்க பாட்டி வைத்தியம்!
தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக சிறுநீரகக்கல், இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும். உணவு முறை, வாழ்வியல் மாற்றம், தேவையற்ற பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றை இந்த பிரச்சினைக்கு நாம் எடுத்துக்காட்டாக சொல்லி கொள்ளலாம்.
இவற்றின் தாக்கத்தால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளும் பாதிக்க செய்கிறது.
சிறுநீரகக் கற்கள் எப்படி வருகிறது?
நமது உடலில் தேவைக்கு அதிகமாக சேர கூடிய எல்லாமே ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில் உடலில் சேர கூடிய ஆக்சலேட் என்கிற மூல பொருள் கால்சியமுடன் சேர்ந்து கால்சியம் ஆக்சலேட்டாக (Calcium Oxalate) மாறி விடுகிறது. இவை தான் கடைசியில் சிறுநீரக கற்களாக உருவாகி விடுகிறது.
சிறுநீரகக் கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:
- அடி முதுகுப் பகுதியில் வலி
- இயல்புக்கு மாறான சிறுநீர்
- சிறுநீரில் இரத்தம்
- சிறுநீர் போகும்பொழுது அதிகப்படியான எரிச்சல்.
- குளிர் காய்ச்சல்,
- குமட்டல், வாந்தி
- மார்பக எலும்பிற்கு கீழே வலி
- நெஞ்செரிச்சல்
- செரிமான பிரச்சனை
சாப்பிட கூடாத உணவுகள் உப்புகள்
பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ், கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் கற்களை கரைக்க வீட்டு வைத்தியம்
தண்ணீர்
சிறுநீர் கற்களை கரைக்க, தினசரி 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
பார்லி
சிறுநீர் கற்களை கரைக்க, பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.
அகத்தி கீரை
சிறுநீர் கற்களை கரைக்க வாரத்தில் ஒருமுறை அகத்திக் கீரையை சமைத்து சாப்பிடலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு, முள்ளங்கி சாறு
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
பரங்கிக்காய்
பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
புதினாக் கீரை
புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.