இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள் - விசாரணையில் பகீர் தகவல்!
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இருமல் மருந்து
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை, தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்குள், ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுகுறித்த விசாரணையில், காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை அந்த குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.
குழந்தைகள் பலி
மேலும், கோல்ட்ரிப் மருந்தில் மட்டும் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் டை எத்திலீன் கிளைசால் என்ற ரசாயனம் 48 விழுக்காட்டிற்கு மேல் கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனால், அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும், கோல்ட்ரிப் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்தி வைக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர்.மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.