இரக்கம் காட்டிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஹேப்பி!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600 ஆக விற்பனையாகிறது.
அதேபோல், 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.6,170க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ78.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.78,200க்கும் விற்பனையாகிறது.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil