வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை - எப்போது குறையும்?
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.4) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,720 ஆகவும், கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,715 ஆகவும் வி்ற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.78 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனையாகிறது.