விமான கழிவறையில் நம்பர் லாக்குடன் இருந்த பொருள் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

Tamil nadu Chennai Flight
By Jiyath Mar 05, 2024 11:58 AM GMT
Report

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கழிவறையில் இருந்து 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் சோதனை 

அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விமான கழிவறையில் நம்பர் லாக்குடன் இருந்த பொருள் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! | Gold Seized In Chennai Airport

இதனையடுத்து அபுதாபியில் இருந்து வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்காததால் விமானத்திற்குள் ஏறி சோதனை நடத்தினர்.

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு!

18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 - அரசு அதிரடி அறிவிப்பு!

சிக்கிய தங்கம் 

அப்போது விமான கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் கருப்பு நிற டேப் சுற்றப்பட்டு சோப் வடிவில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விமான கழிவறையில் நம்பர் லாக்குடன் இருந்த பொருள் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! | Gold Seized In Chennai Airport

நம்பர் லாக்குடன் இருந்த அந்த பொருளை பிரித்து பார்த்தபோது, அதில் 4½ கிலோ தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ½ கோடி ஆகும். அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.