சென்னை விமான நிலையத்தில் நாய் மாதிரி ட்ரீட் பண்ணாங்க...! தாலியை கழட்ட சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் அட்டூழியம்

Chennai Malaysia
By Thahir Jul 24, 2023 11:07 AM GMT
Report

சென்னை விமான நிலையம் வந்த மலேசியா வாழ் தமிழர் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் நாய் மாதிரி ட்ரீட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாலியை கழட்ட சொன்ன சுங்கத்துறை அதிகாரிகள்

மலேசியாவைச் சேர்ந்த தமிழர் தம்பதி இன்று காலை சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மலேசியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதி தங்கள் கொண்டு வந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலைத்தை விட்டு வெளியே வரும் போது அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Customs officials asked to remove thali

அப்போது பெண் அணிந்திருந்த தங்க தாலி செயினை கழட்ட சொல்லியுள்ளனர். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது கணவர் ஒரு இந்தியனா எப்படி எங்கள் தாலியை கழட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பெண் நாங்கள் கல்யாணம் முடிந்ததில் இருந்து என் தாலியை நான் கழட்டி வைத்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாய் மாதிரி ட்ரீட் செய்த அவலம் 

அப்போது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியர்கள் கிடையாது நீங்கள் மலேசியன் என்று கூறியுள்ளார்.

எங்களுக்கு எவ்வளவு நகை கொண்டு வரவேண்டும் என்று தெரியாது என்றும் எவ்வளவு அபராதம் என்றும் கேட்டுள்ளார்.

மேலும் தங்களை விமான நிலையத்தில் 2 1/2 மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாய் மாதிரி ட்ரீட் செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Customs officials asked to remove thali

மேலும் தன் கணவரிடம் இருந்த நகையை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் நகை மீட்க லட்சக்கணக்கில் சுங்கத் துறை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பேரம் 

மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தனக்கு அபரதமாக 7 லட்சம் ரூபாய் எழுதியதாகவும் பின்னர் அதை ரூ 5 லட்சமாக குறைத்தாகவும் அப்போது அங்கிருந்த மற்றொரு சுங்கத்துறை அதிகாரி ஏன் சார் இவ்வளவு குறைத்துவீட்டீர்கள் என கேள்வி எழுப்பியதாகவும் அப்போது மற்றொரு அதிகாரி பிழைத்து போகட்டும் என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இது இந்தியா..என்ன நடக்குது.. ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துறீங்க... இது இந்தியா 10 கிராமில் தான் தங்கம் கொண்டு வரவேண்டும் என்றால் எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து மலேசியன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.