கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கோல்ட் ரேட்
தங்கம் விலையானது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தற்பொழுது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் உலக அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 800 உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.364 அதிகரித்து சவரனுக்கு ரூ.44,444 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45 அதிகரித்து கிராமுக்கு ரூ. 5,555 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,200 ஆகவும் கிராமுக்கு ரூ.6,025 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ. 77.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கு விற்பனையாகிறது.