அதிரடியாக குறைந்த தங்கம் விலை - நகை வாங்க இதுதான் சரியான நேரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து 5,600 ரூபாய் ஆகவும்,
குறைவு
சவரன் ஒன்றுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து 4,587 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.264 வரை குறைந்து ரூ.36,696 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil